![]() |
||
| புத்தளம் நெனசல | ||
இலங்கை அரசாங்கத்தினால் உலக அறிவூ கிராமத்திற்கு எனும் கௌரவ ஜனாதிபதியின்
திட்டத்தினால் வழங்கப்பட்ட நெனசல எனும் எமது நிறுவனமானது சுமார் 3
வருடங்களை கடந்திருக்கும் நிலையில் பல சாதனைகளை நிகழ்த்தி வருவது
குறிப்பிடத்தக்க விடயமாகும். 2007.01.06 ஆம் திகதி அன்று மின்சக்தி மற்றும்
எரிபொருள் அமைச்சர் கௌரவ W.D. ஜோன் செனவிரத்ன மற்றும் பிரதி அமைச்சர்
மஹிந்தானந்த அழுத்கமகே அவர்களால் எமது நெனசல உத்தியோக பூர்வமாக திறந்து
வைக்கப்பட்டது. அக்காலத்திலிருந்து இது வரை காலமும் பல வெற்றிகளை
பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் குறிப்பிட்டு சிலவற்றை கூற முடியூம்.
நெனசல மற்றும் எமது தனியார் நிறுவனமான Global College of Computer
Studies இனால் இலவச ஆங்கிலப்பயிற்சி நெறியை தொடர்ந்து வந்தது முதலில்
குறிப்பிடத்தக்க விடயமாகும். இதில் சுமார் 456 மாணவர்கள் இப்பயிற்சி நெறியை
பூர்த்தி செய்துள்ளார்கள். மற்றும் 2007 தொடக்கம் இதுவரை காலமும்
மாணவர்களின் அறிவூ விருத்திக்காவூம், மாணவர்களின் நலன் கருதியூம்,
மாணவர்கள் மற்றும் சிறுவர்கள், தொழிளாலிகள் யாவருக்கும் இணையம் மற்றும்
கணனிக்கும் சேர்த்து மணித்தியாளமொன்றிற்கு சுமார் 30 ரூபா மாத்திரமே பெற்று
வருகின்றது. இந்த வகையில் இந்நெனசல மூலம் பார பட்சமின்றி சகலரும்
பயன்பெற்று வருகின்றனர். |
||
| back... |